letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de christmas rap song by tripla - tripla

Loading...

ஆம் !! சரித்திரம் சொல்லும் வேதம் சொல்லிசை வடிவில்
பாடிடுவோம் கீதம் ! கீதம் !!
என்னோடு வாங்க பின்னிட்டு செல்வோம் இயேசுவின்
பிறப்பால் ஆடிடுவோர் கூட்டம் !!!
வேதனை இல்லை
சோதனை ஜெயிப்போம்
மாற்றமே இல்லை, தேவ கிருபை
உரைக்க வந்தோம் பிறப்பின் பெருமை
மனிதன் விழுந்த பின் இழந்த உரிமை
மீண்டும் இனைய நினைத்தும் முழுமையடைய தேவ மகிமை

தொடர்ந்து பாவம் நம்மை விழுங்க வகை தேடும்
அதுபோல் கடந்த கால சாபம் நம்மில் போராடும்
ஏங்கிடும் மனித உள்ளம், காண்கிற தேவனாக
இறங்கி வந்துவிட்டார் நம்ம யூத ராஜ சிங்கமாக

பிறந்துவிட்டார் மனித உறவில் கலந்துவிட்டார்
மனதை தொட்டார் மகிமையடைய பாடுபட்டார்
என்னை தொட்டார் தம்மை கொடுத்து என்னை பெற்றார்
இன்னும் என்ன பூமி அழியும் வார்த்தை அழியா !!!

வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார்
சொல்லு
வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார்

இதய துடிப்பில் இணைந்த பிறகு சிறுவை எனக்கு அடைக்கலம்
சிறிது வேகம் இருந்தும் மீண்டும் கவனி வார்த்தை முக்கியம்
மனித குளத்தின் உண்மை அறிந்தும் இறங்கி வந்த அதிசயம்
சந்தேகம் வேண்டாம் இது தேவன் உரைத்த உண்மை சத்தியம்
கவிதை வரியில் தெரிந்த மொழியில் கொடுத்த வேலை கருதி
சிறப்பு செய்தி ஏசு பிறப்பில் நாங்கள் மூவர் மூழ்கி
தகுதியற்ற நமக்கு தகுதி கொடுத்த தேவன் உதவி
சொல்லிசை எங்களுக்கு ஊழியத்தில் சிறிய பகுதி

என்னிடம் கேட்டார்கள் தூதர் ? தானே தேவன் அல்ல என்றும் !
பதில் வார்த்தை வந்தும் வாதாட எனக்கு நேரமில்லை
கல்லும் மண்ணும் என கடவுளால் அல்ல என்று சொல்ல
எனக்கு நிமிடம் பொதும் ஆனால் கிறிஸ்தவுனுக்கு அது சரியல்ல
எத்தனை வருடம் ஷீஷானாக பின்தொடர்ந்தும்
சினத்தின் நிமித்தம் தேவ மகிமை இழக்க விரும்பவில்ல
எத்தனை கோடி நேசம் நேசர் என்மேல் வைத்த பின்பும்
எப்படி சொல்ல முடியும் விலகி ஓட முடியவில்ல

தேவை உடைந்த உள்ளம் கொடுக்க மனமிருந்தால்
கிருபை போதும் புதிய பாதை அமைக்க போறோம்
தேவ நாமம் மகிமையடைய வேத ஞானம் சிலுவை பாரம் நமக்குள் பெருக
திரும்ப திரும்ப அழைக்கும் தேவன் திரும்ப அழைக்கும் தேவன்

உரிமை அனைத்தும் இழந்த பிருகு மனித குளத்தை
மீட்டு கொண்டு செல்ல
கன்னி மரியாளின் கர்ப்பத்தின் மூலம் உலகில் வந்தபின்
வெகுமதி பல
இயேசு பெயர் ஆகா, தச்சன் மகனாக
மேசியா வருவார் வாக்கு நிறைவேற
முப்பதாம் வயது நெருங்க தேவன் மறித்து மீண்டும் எழும்ப

வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார்
சொல்லு
வானவர் புவி மானிடர் புகழ் பாடிட பிறந்தார்

வானவர் புவி
அகில உலகம் படைத்த

நம் மானிடர்
எளிமை உருவம் எடுத்த

பாலகன் பிறந்தார் -2

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...