letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de from "chinnavar" - swarnalatha feat. manoj

Loading...

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்… ம்… ம்…
சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்… ம்… ம்…
கூடும் காவேரி இவ தான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்… ஹோ…
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்… ம்… ம்…
சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்… ம்… ம்…
கட்டுமர தோனி போல
கட்டழகு உங்க மேலே
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ… ஓ… ஓ… ஓ…
பட்டு உடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ… ஓ… ஓ… ஓ…
பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேலே நீ போடு தூங்காத விருந்து
நாணம் உண்டல்லோ
அதை நானும் கண்டல்லோ
இதை நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ… ஓ…
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்… ம்… ம்…
சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்… ம்… ம்…
வெள்ளியில தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேலை வந்தாச்சு கண்ணம்மா… ஆ… ஆ… ஆ…
மல்லிகைப்பூ மாலைக் கட்ட
மாரியிட வேலைக்கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா… ஆ… ஆ… ஆ…
கடலோர காத்து
ஒரு கவிப்பாடும் பாத்து
காணாம நூலானேன் ஆளான நான் தான்
தோளோடு நான் சேர கூறாதோ தேன் தான்
தேகம் இரண்டல்லோ
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்… ம்… ம்…
சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்… ம்… ம்…
கூடும் காவேரி இவ தான் உன் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்… ஹோ… ஓ…
அந்தியில வானம்
ஹா…
தந்தனத்தோம் போடும்
ஆ… ஹா…
அலையோடு சிந்து படிக்கும்… ம்… ம்…
சந்திரனே வாரும்
ஓய்…
சுந்தரியை பாரும்
ஆ… ஹா…
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்… ம்… ம்…

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...