letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de en mannavva - srinivas & aditi paul

Loading...

என் மன்னவா மன்னவா
என்னை விட அழகி உண்டு ஆனால்
உன்னை விட உன்னை விடத்
தலைவன் இல்லை ஆமாம்
உன்னை விட உன்னை விடத்
தலைவன் இல்லை

சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவை விண்ணில் பூசி விழுங்கி விட்டாய்

அதி வீரா உயிரை உயிரால் தொடு வீரா
உன் கண்களோ உன் கண்களோ பூ தேடுதே
உன் கைகளோ உன் கைகளோ வேர் தேடுதே

நூறு யானைகளின் தந்தம் கொண்டு ஒரு
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம் கொண்டு அந்தக் கவசம் உடைத்து
உன் மார்பில் மையமிட்டேனே

தென்னாட்டுப் பூவே தேனாழித் தீவே
பாலன்னம் நீ நான் பசிகாரன் வா வா
மோகக் குடமே முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி பந்தி வை ராணி

வெய்யில் பாராத வெள்ளைப் பூக்களைக்
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற மன்னன் உன்
கால் சுண்டுவிரல் கேட்டேனே

சிற்றின்பம் தாண்டிப் பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம் உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே மோன வடிவே
என்னைக் கூடல் கொள்ள வா
கொற்றவை மைந்தா

சின்னச் சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தேன் இந்த
வெண்ணிலவை வெண்ணெய் பூசி விழுங்கி விட்டேன்

அதி வீரா உயிரை உயிரால் தொடுவீரா

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...