letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de sthothiram thuthi - ostan stars

Loading...

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
கொடுத்தீர் உம்மையும் எனக்காக
கொடுத்தீர் உம்மையும் எனக்காக
எடுத்தீர் என்னையும் உமக்காக

1.வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்

எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே

அல்லல் யாவும் அறுத்தீரே -2
அலைந்த என்னையும் மீட்டீரே
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

2 . கண்ணின் மணிபோல் காத்தீரே
எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்
கண்ணின் மணிபோல் காத்தீரே
எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்

அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே

மன்னா எமக்கும் நீர் தானே – 2
எந்நாளும் எங்கள் துணை நீரே

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

3.தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவே நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தேவே நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே

தீதணுகாதும் மறைவினிலே – 2
தேடியுமதடி தங்கிடுவேன்

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...