letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de 137.thudhigal oyaadhu (official video) | johnjebaraj - ostan stars

Loading...

மீன்களை பிடித்தவன்
மனுஷனை பிடிக்கவே
மாற்றின இயேசு என்
படகில் உண்டு

நிச்சயம் ஒரு நாள்
மறுத்தலிப்பேன் என்று
அறிந்தும் அழைத்தவர்
அருகில் உண்டு

நான் வீசும்
வலைகள் எல்லாம்
வெறுமையாய் வந்தாலும்
என்னோடு அவர் இருக்க
குறையேது

புயல் அடித்தாலும்
அலையடித்தாலும்
என் துதிகள் ஓயாது

கரை தெரியாமல்
கண்ணலைந்தாலும்
என் துதிகள் ஓயாது

என் நம்பிக்கை
அவமானாலும்
என் துதிகள் ஓயாது
கைவிட தெரியாதவரை
விட்டு ஓட முடியாது
உன்னை விட்டால் நம்புவதற்கு
வேற யாரும் கிடையாது

கைவிட தெரியாதவரை
விட்டு ஓட முடியாது
உம்மை விட்டால் நம்புவதற்கு
எனக்கு யாரும் கிடையாது

1.கடலிலே மிதந்திடும்
படகை நான் நம்பல
கடல் மீது நடப்பவரை
நம்பி வந்தேன்

நீந்திட தெரிந்த
மீனவனாய் இருந்தும்
நீர் வந்து கைதூக்க
காத்திருந்தேன்

நான் மூழ்கும் செய்திய
ஊர் பேச விடமாட்டிர்
அழைத்தவர் கைவிடலென்னு
பேச வைத்தீர்
ஓஓ……..
என் துதிகள் ஓயாது
ஓஓ……..
என் துதிகள் ஓயாது
ஓஓ……..
என் துதிகள் ஓயாது

கைவிட தெரியாதவரை
விட்டு ஓட முடியாது
உம்மை விட்டால் நம்புவதற்கு
வேற யாரும் கிடையாது

கைவிட தெரியாதவரை
விட்டு ஓட முடியாது
உம்மை விட்டால் நம்புவதற்கு
வேற யாரும் கிடையாது

ஓஓ……..ஓஓ………..ஓஓ………..
ஓஓ……..ஓஓ………..ஓஓ………..
ஓஓஓஓஓஓ……..
ஓஓஓஓஓஓ………

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...