letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de kannin maniye - malliga arun feat. chitra

Loading...

கண்ணின் மணியே கண்ணீர்த் துளிகள் சிந்திடவேண்டாம்
நான் காற்றாய் மாறிக் கன்னம் துடைப்பேன் கலங்கிடவேண்டாம்

கண்ணின் மணியே கண்ணீர்த் துளிகள் சிந்திடவேண்டாம்
நான் காற்றாய் மாறிக் கன்னம் துடைப்பேன் கலங்கிடவேண்டாம்
தூரம் நம்மைத் துண்டித்தாலும் காதல் கெடுமா
ஒரு விளக்கை யாரும் திருடிக்கொண்டால்
விடியல் என்ன தள்ளிப்போகுமா

உனக்காகவே உனக்காகவே
உயிர்வாழ்வதே உனக்காகவே
கைநீட்டிக் கேட்டேன் அன்பே
நீ ஒரு கரையில் நான் ஒரு கரையில்
நதியாய் மாறி என்னை சேரவா

கண்ணின் மணியே கண்ணீர்த் துளிகள் சிந்திடவேண்டாம்
நான் காற்றாய் மாறிக் கன்னம் துடைப்பேன் கலங்கிடவேண்டாம்

நீதானே என் சுவாசமே
நான் மூச்சின்றி வாழ்வது முறையா
நீதான் என் சந்தோஷமே
என் சந்தோஷம் அழுவது சரியா

என்னாலே தீரும் உந்தன் பாரம்
உன் வானம் தொட்டுவிடும் தூரம்
ஒரு சொட்டுப் புன்சிரிப்புப் போதும்
என் கால்கள் வானம் கூடத் தாண்டும்

கடல் எல்லாம் காய்ந்தாலும்
காயாது நம் காதல்
ஜகம் அழிந்தாலும் யுகம் முடிந்தாலும்
கால எல்லை தாண்டி வாழுமே

உனக்காகவே உனக்காகவே
உயிர்வாழ்வதே உனக்காகவே
கைநீட்டிக் கேட்டேன் அன்பே
நீ ஒரு கரையில் நான் ஒரு கரையில்
நதியாய் மாறி என்னை சேரவா

காற்றோடு உடல் வாங்கியே
கண்ணா நான் பறந்தோடி வரவா
தூரங்கள் துடைத்தோடி வா
என் தொடுவானே என்னைத் தொட வா

என் கால்கள் எட்டுவைக்கும்போது
கடல் கூடக் கால்வாயாகும் பாரு
நம் காதல் எல்லை தாண்டும்போது
சீனத்து சுவரும் சின்ன கோடு

தீ என்னைச் சுட்டாலும்
திசை எல்லாம் செத்தாலும்
உன்னுயிர் காக்க என்னுயிர் தந்து
காதலன் மார்பில் கண்கள் மூடுவேன்

உனக்காகவே ஓ உனக்காகவே
உனக்காகவே உனக்காகவே
உன் காயம் ஆறும் என்றால்
மண்வெளி தாண்டி விண்வெளி ஏறி
விண்மீன் பிரிந்து மருந்து பூசுவேன்
பூசுவேன் பூசுவேன்

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...