letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de manogari - haricharan feat. mohana

Loading...

உருக்கியோ… நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ… என் அழகின் சாரல் சாரல்

பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்… மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்… ஆரல்

மனோகரி… மனோகரி…
மனோகரி… மனோகரி…

கள்ளனா௧ உன்னை அள்ள
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!

ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்… தேடல்…

நீல வானை ஊற்றி
கண்கள் படைத்தானோ?
வேறே… என் தேடல் வேறே!
தேயும் திங்கள் தேய்த்து
செய்த இடை தானோ?
வேறே… என் தேடல் வேறே!
வேழம் அது கொண்டேதான்
அவன் என் தோள்கள் செய்தானோ!
வாழை அது போலே தான்
அவன் என் கால்கள் செய்தானோ!

வழுக்கிட வா!
மனோகரி… மனோகரி…
மனோகரி… மனோகரி…

பூவை விட்டு பூவில் தாவி
தேனை உன்னும் வண்டாய்
பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்… தேடல்…

மேகத் துண்டை வெட்டி
கூந்தல் படைத்தானோ?
வேறே… என் தேடல் வேறே!
காந்தள் பூவைக் கிள்ளி
கைவிரல் செய்தானோ?
வேறே… என் தேடல் வேறே!
ஆழி கண்ட வெண்சங்கில்
அவன் அணல் ஒன்றைச் செய்தானோ!
யாளி இரண்டைப் பூட்டி
அவன் தனம் ரெண்டைச் செய்தானோ!

வழுக்கிட வா!
மனோகரி… மனோகரி…
மனோகரி… மனோகரி…

தேகம் எங்கும் தாகம் கொண்டு நான் தவிக்கிறேனே
மோகம் மொண்டு நான் குடிக்கிறேன்!

ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்… தேடல்…

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...