letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de maargazhi (sangamam) - a. r. rahman

Loading...

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

இதயம் இதயம் எரிகின்றதே
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல்
என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா

சூடித் தந்த சுடர்க்கொடியே
சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று
நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி… ஆஆஆ
ஜோதி எப்படி
ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி
ஜோதியை எரிக்கும்
வா
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா (மார்கழித் திங்களல்லவா)

மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...